திருடன்கூட பிழைக்க வழியில்லாததால்தான் மற்றவர்கள் உழைப்பை திருடுகிறான். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் நேரம் கடப்பதற்காக மற்றவர்கள் மனதை திருடுபவர்கள் திருடனைவட கேவளமானவர்கள்.காதல் என்ற சொல்லுக்கு தனிமரியாதை இருப்பது தெரியாதவர்கள்தான் இப்படி மற்றவர்கள் உணர்வை விளையாட்டாக எடுத்துக்கொள்வார்கள்.காதலைக்கூட ஒரு வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.அஃதாவது தற்போது இருப்பவரைவிட உயர்ந்தவர் யாராவது வந்துவிட்டால் இருப்பவரை விட்டு உயர்ந்தவரிடம் செல்வது.
உங்களுடைய மனதை கொச்சைப் படுத்தியவர்களுக்காக அழுக வேண்டுமா?உங்களுடைய வாழ்க்கையோடு விளையாடியவர்களுக்காக ஏங்க வேண்டுமா? ஆனால் வெள்ளையாக இருப்பது எல்லாம் பால் என்று நம்புவது போல பார்ப்பவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று நினைப்பது நம்முடைய தவறுதான்.இந்த ஒரு ஏமாற்றமும் அனுபவமும் நம்முடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைத்துக்கொள்ள வேண்டும். அது நம்முடைய கடமை.நம்முடைய மனதை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாட வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது.அவ்வாறு வாய்ப்பு கொடுத்து விட்டால் நம்முடைய ஏமாற்றத்திற்கு காரணம் நம்முடைய அறியாமைதான். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள் தவறு யாரிடம் உள்ளது என்பதை.
ஒருமுறை ஏமாற்றம் அடைவது தவறல்ல ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைவதுதான் தவறு.பெற்றோர்களை தவிர நம்மை வேறு யார் வேண்டாம் என்று விலகி சென்றாலும் அவர்களை தேடி செல்ல கூடாது. குறிப்பாக இதுபோன்ற சூழ்நிலையில் யாரிடமும் வணங்கி செல்லக்கூடாது.ஏனெனில் எங்கெல்லாம் வணங்கி செல்கிறோமோ அங்கெல்லாம் நாம் அடிமை படுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.நமக்கு பிடித்தவர்களுக்காக வணங்கி செல்வது தவறல்ல ஆனால் அதே நேரத்தில் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேட்டால் தான் நமக்கு தகுந்த மரியாதை நிலைத்திருக்கும்.உண்மையாக உள்ளவர்களுக்கு அநியாயம் நடக்கும் பொழுது அங்கு எதோ அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கப் போகிறது என்பது வாழ்க்கை உணர்த்திய பாடம்.வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் நன்மை தீமைகளிலும். ஒரு நன்மை இருக்கும் என்பதை நம்புங்கள் நிம்மதி கடைசி வரைக்கும் நீடிக்கும்.
வேதனைகளை எதிர்ப்போம்!
மனதை வெல்வோம்!
சாதனை படைப்போம்!
No comments:
Post a Comment