Monday, 9 December 2019

உன் மனசு ரசிக்க சில காதல் கவிதைகள்

உன் மனசு ரசிக்க சில காதல் கவிதைகள்

credit: third party image reference

நாணம்

அதுவரை வெட்கத்தை சூடியிருந்தாய்உன் முகத்தில்

எனை பார்த்த அந்த நொடி

வேறு வேறாக பாவனைகளை

மாற்ற முயற்சித்து

தோற்றுப்போனாய்

விடாமல் பார்த்தபடி இருந்தேன்

வெட்கம் தலைக்கேறி

விலகி ஓடத் தயாரானாய்

வா என்று கை பிடித்தேன்

வலிய கையை விடுவித்து

இப்படி நீ போவது எங்கே?

தென்றல் காற்றே.

credit: third party image reference

வீரம்

வெளியே சண்டைகள் பல போட்டதுண்டு

தனியே உன்னுடன்சண்டையிட காரணம் இல்லை

ஆனாலும் சட்டென வாளெனவே எடுத்து வீசினாய்

உன் கூந்தல் முடியை

அதில் ஒன்று

வரி வரியால் கீறி என்னை

வளைத்து வீழ்த்தியது

உன் மடியில்

இனி வாராது விடியல்

credit: third party image reference

கடிதம்

அப்படி ஒரு கடிதம்

எழுதவேண்டும் உனக்கு

அணுவணுவாய் நீ இசைக்க

ரசித்து மயங்கி சிரிக்க

யாருக்கும் காட்டாது ரசிக்க

தனியே தவிக்க

நெக்குருகி நினைக்க

நெருஞ்சி பூவாய் கணக்க

பொத்திப் பொத்தி பாதுகாத்து

பூவென எடுத்து ஈரேழு சன்மத்திலும்

எனை நினைக்க வைக்க

அப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும்உனக்கு

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment