கடந்த 2014ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படம் மூலம் 17 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. அதன்பின் கோலிவுட்டுக்கு திரும்பிய இவர் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான திரைப்படம் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
இந்த படம் இவருக்கு போதிய வரவேற்பை கொடுக்காததால். அதன்பின் பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படம் கோமாளி.
இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வாலை தவிர்த்து பள்ளிப்பருவ கதாநாயகியாக வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இந்த திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் தீயல் என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். கன்னட திரைப்படம் கதாநாயகி பட்டியலில் அதிக தமிழ் ரசிகர்களை கொண்டவர் இவர்தான்.
தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி சுற்றுலா செல்லும்போது அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருவார். எப்போதும் கண்களைக் குளிர வைக்கும் புகைப்படங்கள் வெளியீடு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
credit: third party image reference
No comments:
Post a Comment