பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி:
திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த தொழிலாளியின் மனைவி,கோவிலுக்கு செல்வதற்காக அங்குள்ள ஒரு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குளியலறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே திடீரென வெளிச்சம் வந்து சென்றுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு பார்த்த போது செல்போன் மட்டும் தெரிந்துள்ளது.பின்னர் அந்த பெண் நைசாக வெளியே சென்று தன் கணவரிடம் கூறியுள்ளார்.உடனே விரைந்து சென்ற அந்த தொழிலாளி குளியலறை அருகே செல்போனுடன் நின்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.இதனால் அந்த வாலிபர் தப்ப முயற்சி செய்தார்.
இதனிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்புவாசிகள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலிசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த மனோஜ் குமார் வயது ( 20) என்பது தெரியவந்தது.மேலும் இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மனோஜ் குமார் ஏற்கனவே அந்த பகுதியில் அந்த பெண்ணின் வீட்டு அருகே வாடகைக்கு தங்கியுள்ளார்.இதனால் அங்குள்ள குளியலறை பற்றி நன்கு தெரிந்துள்ளது.
அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது குளியலறையில் விளக்கு எரிந்துள்ளதை அவர் பார்த்துள்ளார்.இதனால் யாரோ குளித்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே கொண்டுவந்து நிறுத்திவிட்டு , ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment