Monday, 9 December 2019

பணவரவை அதிகமாக அல்லி தரும் பச்சை கற்பூரம்


பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு.

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து. பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.

2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அப்படி பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

credit: third party image reference

ஒருவருக்கு மனநிம்மதி இல்லாமல் போவதற்கு காரணமே, வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள்தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறி விடும். அதனால் வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்கும்.

credit: third party image reference

அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை வீட்டில் தங்கச் செய்யும் தன்மை இருக்கிறது. அதனால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாத நிலை உருவாகும். வீண் செலவுகள் இருக்காது. பச்சை கற்பூரத்தினை பணம் இருக்ககும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசனைகளையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து, உங்களது பர்சில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பணம் செலவானாலும், வரவும் இருந்து கொண்டே இருக்கும்.

credit: third party image reference

தொழில் விருத்தி அடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான

பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டுவைக்கலாம்.

வீட்டில் நடைபெறக் கூடிய எல்லா

சுபநிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி, நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டுவைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள்,

கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

பூஜையின்போது கட்டி கற்பூரத்துடன் சிறிதளவு மட்டும் பச்சை கற்பூரத்தை வைத்து அதை ஏற்றி கடவுளை வழிபட்டால் மிக மிக சிறப்பு என்று கூறப்படுகிறது. கோவில் தரப்படும் பிரசாதங்கள்இலும் பச்சைக் கற்பூரம் கலந்து இருப்பதை நாம் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment