தமிழகத்தில் நித்தியானந்தாவை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்மேல் பலவிதமான வழக்குகள் உள்ளன. அதில் குறிப்பாக பாலியல் வன்புணர்வு வழக்கு, கொலை வழக்கு போன்றவை அடங்கும். அப்படி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நித்தியானந்தா தனி தீவையே ஒன்று வாங்கி அதை தனிநாடாக பதிவு செய்து அந்த நாட்டிற்கு கைலாச என்று பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா காலில் அமித்ஷா விழும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சுவாமி நித்யானந்தா நாட்டை விட்டு புறப்பட முடிவெடுத்தபோது அனுஷா அந்தத் தருணத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படம் என்று இணையதளத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்டு வந்தது.
இந்த புகைப்படத்தில் நித்தியானந்தா காலில் விழுபவர் அவர் தலை வழுக்கையும் நித்தியானந்தாவும் தான் தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த படத்தை பதிவிட்டவர் அமித்ஷா என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்தவர்கள் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் அமித் ஷா என்ற நம்பிக்கையில் பகிர தொடங்கினர். இந்த விவகாரம் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கண்களில் பட ஆங்கில நாளிதழ் தொடங்கி பல்வேறு செய்தி நிறுவனங்கள் விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில் அந்த புகைப்படத்தில் இருப்பது உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லை என்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட புகைப்படத்தில் நித்தியானந்தா காலில் விழுபவர் மொரிசியஸ் நாட்டில் இந்திய உயர் ஆணையர் கோபுர்துன் என்பது தெரியவந்துள்ளது.

இந்த புகைப்படம் தமிழ் முகநூல் வாசிகள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த புகைப்படம் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.இந்த நிலையில் தான் அது அமித்ஷா அல்ல, மொரிஷியஸ் நாட்டை சேர்ந்த இந்திய உயர் ஆணையர் என்பதும் மேலும் நித்தியானந்தா மொரிசியஸ் அரசுடன் இரண்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார் என்ற அதிரடி தகவல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மொரிஷியஸ் நாட்டில் பள்ளி பல்கலைக்கழகங்கள் திறக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால் தான் அந்த வைரல் புகைப்படத்தில் மொரீசியஸ் நாட்டின் தேசியக் கொடியும் உள்ளது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
credit: third party image reference
பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா போன்ற நபர்களை வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல விட்டுவிட்டு இணையதளத்தில் மொபைல் போனில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களை போலீஸ் கைது செய்யும் நடவடிக்கை பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் இணையதள வாசிகள் கேலி செய்து அதற்கெதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment