இந்திய பொருளாதாரம் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட முயற்சியால் அது தொய்வில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும். அப்படி தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் தரளமய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன் நீட்சியாக தான் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதும் இந்தியவால் சவால்களை தாங்கி நிற்க முடிந்தது.
தற்போது இந்தியா மிக பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. ஆனால் இதனை தவிர்க்க போதுமான பொருளாதார யோசனைகள் ஏதுமில்லாமல் அரசாங்கம் திணறி வருகிறது.

ஏன் இந்த நிலைமை? என்பதை புரிந்துகொள்ள மோடி அரசாங்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஆட்சி நிலைகளை தெளிவாக பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதிக வருமானமுடைய வேலைவாய்ப்புகள், வெளிப்படையான ஆட்சி, அதிக முதலீடு கொண்ட ஆட்சி, ஊழல் அற்ற ஆட்சி என மோடியின் முதலாம் ஆட்சி தொடங்கியது. அப்போது சீரான பொருளாதர வளர்ச்சியால் இந்தியா இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் பெரிய அளவிலான நெருக்கடிகள் இல்லாமல் மோடியால் கடக்க முடிந்தது.

ஆனால் என்று நவம்பர் புரட்சி மற்றும் ஜூலை புரட்சி என்று மோடி இறங்கினாரோ அன்றே பொருளாதரத்தில் சுணுக்கம் ஏற்பட்டு விட்டது. பணமதிப்பழிப்பால் பெரும் சிக்கலை மக்கள் கண்டனர். நிதி பற்றாக்குறை அனைவரையும் பாதித்துவிட்டது. இந்த நடவடிக்கையால் முதலில் இடறி விழுந்தது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் தான். இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தில் 60 சதவிகித வருமானத்தை பெரு நிறுவங்கள் கொண்டிருந்தாலும், அதிகமான வேலைவாய்ப்புகளை கொண்டிருந்தது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் தான் இதானால் தான் பணமதிப்பழிப்பால் முதலில் வீழ்த்தப்பட்டது வேலைவாய்ப்புகள் தான்.

இதனையும் சமாளித்த சில நிறுவனங்களும் அடுத்த ஜூலை புரட்சியால் தடுமாறி போய்விட்டன. ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்ட பின்னர் பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர ஆரம்பித்தன. அதற்கு சரி சமமாக அதிலிருந்த குளறுபடிகளால் நிறுவனங்கள் புரியாமல் தத்தளித்து விட்டன.
காலம் செல்ல செல்ல பெரும் நிறுவனங்களும் இதனால் தடுமாற தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடு தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேலைவாய்ப்பின்மையை உறுதி செய்ய ஆரம்பித்தன. இதன் நீட்சியாக தான் கோவையில் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வேலைக்கேட்டு மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் திரண்டு நின்றனர் என்பது குறிப்பிட்டதக்கது.
No comments:
Post a Comment