Monday, 9 December 2019

அமெரிக்காவில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டதன் முடிவு..!


அமெரிக்காவில் உள்ள ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை பெரிய அளவில் திறக்கப்பட்டது. இந்த கடை வாசலில் கடையின் விதிமுறை பலகை அமைக்கப்பட்டிருந்தது.

credit: third party image reference

1. கடைக்கு ஒரே ஒரு தடவை தான் வரலாம்.

2. கடையில் மொத்தம் 6 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு மாடியிலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

credit: third party image reference

3. ஒரு மாடியில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர இயலாது! அப்படியே வெளியேதான் செல்ல வேண்டும்.

இது தான் அந்த அதில் கொடுக்கப்பட்ட விதிமுறைகள்....

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்குவதற்க்கு கடைக்கு உள்ளே வந்தார்.

credit: third party image referenceகணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமில்லை சரியாக தேர்வு செய்யவேண்டும், என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே சென்றார்...

முதல் மாடி அறிக்கை பலகையில்

இந்த தளத்தில் உள்ள கணவர்கள் வேலை வாய்ப்பு உள்ளவர்கள்,கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.இது என்ன ஒரு அடிப்படை தகுதி என எண்ணியவாறு மேலே செல்கிறார்...

இரண்டாம் மாடி அறிக்கை பலகையில்

இந்த மாடியில் இருக்கும் கணவர்கள் வேலை வாய்ப்பு உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவற்கள் மேலும் குழந்தைகள் மீது அன்பு செலுத்துபவர்கள் இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணியவாறு மேலே செல்கிறார்.

மூன்றாம் மாடி அறிக்கை பலகையில்.

இந்த மாடியில் இருக்கும் கணவர்கள் வேலை வாய்ப்பு உள்ளவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், குழந்தைகள் மீது அன்பு செலுத்துபவர்கள், மற்றும் வசீகரம் ஆனவர்கள். அந்த இளம்பெண் வசீகரமானவர்கள் என்பதை பார்த்ததும் வியந்தார், ஆஹா. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் என்றால் மேலே போக போக இன்னும் என்னெல்லாம் இருக்குமோ"என்று நினைத்து கொண்டு மேலே சென்றார்.

நாலாவது மாடி அறிக்கை பலகையில்

இந்த மாடியில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், குழந்தைகள் மீது அன்பு செலுத்துபவர்கள், வசீகரமானவர்கள்,மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் கொண்டவர்கள்" இதை விட வேறு என்ன வேண்டும் என்றார். நல்ல குடும்பம் உருவாக்கலாமே...? கடவுளே.! மேல என்ன இருக்கு என்று பார்த்தே ஆகணும், அப்படி என்று முடிவு செய்து விட்டு அடுத்த மாடிக்க்கு சென்றார்.

ஐந்தாவது மாடி அறிக்கை பலகையில்

இந்த மாடியில் இருக்கும் கணவர்கள் வேலை வாய்ப்பு உள்ளவர்கள் கடவுள்மீது நம்பிக்கை உளளவர்கள் குழந்தைகள் மீது அன்பு செலுத்துபவர்கள், வசீகரமானவர்கள், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் கொண்டவர்கள் மற்றும் மிக அதிக ரொமாண்டிக் ஆனவர்கள் அவ்வளவு தான். அந்த பெண்னிற்க்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு மாடி பாக்கி இருக்கின்றதே.அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர் இருப்பார் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது.?சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது மாடிக்க்கு செல்கிறார்.

ஆறாவது மாடி அறிக்கை பலகையில்

""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் கிடையாது.. வெளியே செல்லும் வழி மட்டுமே இங்கு உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம் என்னவென்றால், 

பெண்களை யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்....எங்கள் கடைக்கு வந்தமைக்கு மிக்க நன்றி...!

கீழே படிகளில் இறங்கி செல்லவும் என எழுதியிருந்தது...

பிடித்திருந்தால் லைக் & ஸார் பண்ணுங்கள்.

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment