துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு…
பொதுவாக நம்ம ஊரில் முன்பெல்லாம் சிறுமிகளுக்கு பாவாடை சட்டை, திருமணமாகாத
இளம்பெண்களுக்கு பாவாடை தாவணி திருமணமான பெண்களுக்கு புடவை என்ற விதிமுறை எழுதப்படாத சட்டமாக இருந்தது. இதைவிட்டால் அப்போது வேறு உடை கிடையாது என்ற நிலையும் இருந்தது. ஆனால் இன்றோ பெண்களுக் கு என்றே ஆயிரக்கணக்கான பேஷன் டிசைன்களில் சுடிதார், மிடி, ஜீன்ஸ், டிஷர்ட், உட்பட ஏராள ஆடைகள், குறைந்த விலை முதல், அதீத விலை வரை ஏராளமாக கிடைக்கின்றது.
credit: tamil online share mediaமற்ற உடைகளை விட சுடிதார் பெண்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதால் பெரும்பாலான பெண்கள், அதனை விரும்பி அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு அசௌகரியம் உண்டு. அது என்னவென்றால், துப்பட்டா போட்டுக்கொள்வதுதான்.
credit: tamil online share mediaபெண்களை பொறுத்தவரையில் துப்பட்டா அணிவது என்பது சற்று கடினமான வேலைதான். இருசக்கர வாகனத்தை இயக்கும்போதும் பேருந்து பயணத்தின் போதும், வேலை செய்து கொண்டிருக்கும்போதும், அவ்வப்போது துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருப்பதால் இது அவர்க ளுக்கு கடினமான வேலையாக நினைக்கிறார்கள். ஆனால் தற்போது இக்குறையை குறையை தீர்க்க கேப் துப்பட்டாக்கள் சந்தைகளில் அதிகளவில் வந்துள்ளன•
credit: tamil online share media
மேலாடையுடன் சேர்த்து இந்த கேப் துப்பட்டாவை அப்படியே தைத்துவிடுகிறார்கள். இதனை அணிந்து கொள்ளும் பெண்கள், நிம்மதியாக, தனது வேலைகளிலோ அல்லது பயணங்களிலோ தங்களது முழுகவனத்தையும் செலுத்த உதவியாக இரு க்கும். மேலும் இதுபோன்ற உடை அழகான பெண்களை பேரழகாகவும் காட்டுகிறது எனலாம்.
credit: tamil online share media
No comments:
Post a Comment