Tuesday, 10 December 2019

"அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்" ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா

"அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்" ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா!

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
 

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில்  பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்திருந்த "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி கொடுத்திருந்த ரித்விகாவுடன் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மேலாவது க்ரஷ் ஏற்பட்டுள்ளதா என கேட்டதற்கு, உடனே ஆம், விஜய் சேதுபதி மீது எனக்கு க்ரஷ் உள்ளது. மேலும், ஜெய்சங்கர் மீதும் கிரஷ் உள்ளது என கூறி நகைத்தார்.  

இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு மட்டுமே குறிப்பிடுகிறது ரோஸ்பஸ் காட்சிகளை பிரதிபலிக்கவில்லை .ரோஸ்பஸ் கட்டுரைகளை வெளியிடுவதற்கு வி மீடியா மேடை மட்டுமே வழங்குகிறது.

No comments:

Post a Comment