மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார்.
மெட்ராஸ் திரைப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்கு நேர்மாறாக கவர்ச்சி கடலில் குதித்து விட்டார். கணிதம் மற்றும் கலகலப்பு 2 படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார். இதனால் இவரை தெலுங்கு சினிமாவுக்கு அழைத்தார்கள்.
தெலுங்கு சினிமா என்றாலே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காது. இதனால் இவரை ஐட்டம் பாடலுக்கு இரண்டாம்கட்ட ஹீரோயினாக பயன்படுத்திக் கொண்டார்கள். தற்போது இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்து விட்டது.
அதனால் தமிழ் சினிமா பக்கம் வந்துவிட்டார். சமீபத்தில் இவர் சித்தார்த்துடன் அரவம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.
credit: third party image reference
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறார். அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படி மாறி விட்டீர்களா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.
No comments:
Post a Comment