ரஜினியின் தீவிர ரசிகர் தான் லாகவா லாரன்ஸ் . ரஜினியின் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய லாகவா லாரன்ஸ் , சீமானை எச்சரித்துள்ளார் .

தமிழ் மண்ணில் பிறக்கவில்லை என்கிற காணத்திற்காக ரஜினியின் அரசியல் பயணத்தை சீமான் எதிர்க்கிறார் . அதுமட்டுமல்லாமல் , ரஜினியை கடுமையாக விமர்சனமும் செய்கிறார் . இதுமாதிரியான சீமானின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , சீமானே உங்களை விட ராயப்பேட்டையில் பிறந்த லாரன்ஸ்க்கு அதிகமான கெட்ட வார்த்தைகள் பேச தெரியும் .

இருந்தாலும் எனக்கு பின்னாடி ரஜினி இருப்பதால் தான் அடக்க ஒடுக்கமாக இருப்பதாகவும் , சீமான் தமிழர் என்றால் நாங்கள் அமெரிக்கர்களுக்கா பிறந்தோம் என சீமானை நோக்கி கேள்வியும் எழுப்பி உள்ளார் லாரன்ஸ் . சீமான் அரசியலில் தனியாக ஒடி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார் .

தன்னுடன் கூட ஒடி வருபவர்களுக்கு இன சாயம் பூசி தள்ளி விட்டு விட்டு ஒட நினைத்தால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீமானை சீண்டியுள்ளார் லாரன்ஸ் .ரஜினியின் இதுபோன்ற ரசிகர்களை சீமான் எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

No comments:
Post a Comment