HIGHLIGHTS:
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் மற்றும் டிரைவர் பதவிகளுக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நவம்பர் 30 ஆம் தேதி, வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க நேரடி நியமனம் ஆகும்.
மொத்தம் இரண்டு வகையான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வனக்காவலர் பணிக்கு 227 காலியிடங்களும், டிரைவர் பணிக்கு 93 காலியிடங்களும் உள்ளது. இந்தப் பணிகளுக்கு லெவல் 5ன் படி, மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
1 ஜூலை 2019 அன்றைய தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு 35 ஆக நிணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இரண்டு பணியிடங்களுக்கும் ஒரே விதமான கல்வித்தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள், 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கனரக/இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆட்டோமொபைல் தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை அறிந்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

credit: third party image reference
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள், கணிணி வழித்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை கணினி வழித்தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தக்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள், அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்கும். பிப்ரவரி முதல் வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து, விரல்ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
அனைத்து பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் 300 ரூபாய் ஆகும். SC/ST பிரிவினருக்கு மட்டும் தேர்வுக்கட்டணம் 150 ரூபாய் ஆகும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.
No comments:
Post a Comment